மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு பாலிசிதாரரின் வாகனத்தால் விபத்து காரணமாக ஏற்படும் மூன்றாம் தரப்பினர் பொறுப்புகளை உள்ளடக்குகிறது. இரு சக்கர வாகன மூன்றாம் தரப்பினர் காப்பீடு காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாகனத்தால் மூன்றாம் தரப்பினர் சொத்து/நபருக்கு விபத்து ஏற்பட்டால் அதற்கான சேதங்களை உள்ளடக்குகிறது. இதில் நிரந்தர இயலாமை அல்லது மூன்றாம் தரப்பினர் இறப்பு கூட அடங்கும். 1988 மோட்டார் வாகன சட்டத்தின்படி, இரு சக்கர வாகன உரிமையாளருக்கு மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். மூன்றாம் தரப்பினர் காப்பீடு இல்லாமல் இந்தியாவில் பைக் அல்லது ஸ்கூட்டரை ஓட்டுவது சட்டவிரோதமானது மற்றும் போக்குவரத்து காவலர்கள் அது இல்லாமல் உங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு ₹2000 வரை அபராதம் விதிக்கலாம். எச்டிஎஃப்சி எர்கோ இணையதளத்திலிருந்து மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகனக் காப்பீட்டை வாங்குவது தொந்தரவு இல்லாதது, இன்றே உங்கள் பயணத்தை பாதுகாக்கவும்.
மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டை வாங்குவதற்கு முன்னர், அதன் சில அம்சங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
சிறப்பம்சங்கள் | விளக்கம் |
குறைந்த பிரீமியம் | மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பிரீமியம் ₹ 538 முதல் தொடங்குகிறது மற்றும் விரிவான காப்பீட்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் மலிவானது. |
பொறுப்பு காப்பீட்டை வழங்குகிறது | மூன்றாம் தரப்பினர் சொத்து/நபருக்கு ஏற்படும் சேதம் காரணமாக ஏற்படும் நிதி மற்றும் சட்ட பொறுப்புகளுக்கு எதிராக 3ம் தரப்பினர் பைக் காப்பீடு அதற்கான காப்பீட்டை உள்ளடக்குகிறது. உங்கள் காப்பீடு செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் காரணமாக மூன்றாம் தரப்பினரின் காயம் அல்லது இறப்பு இதில் அடங்கும். |
வாங்க எளிதானது | மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகனக் காப்பீட்டை ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எளிதாக ஆன்லைனில் வாங்கலாம். |
சட்ட தேவையை பூர்த்தி செய்யவும் | மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசியை வாங்குவதன் மூலம் 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நீங்கள் கட்டாய தேவையை பூர்த்தி செய்வீர்கள். |
பயன்கள் | விளக்கம் |
சட்ட சிக்கல்களைத் தவிர்க்கவும் | 1988 மோட்டார் வாகன சட்டத்தின்படி மூன்றாம் தரப்பினர் காப்பீடு கட்டாயமாகும். ஒரு செல்லுபடியான மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு பாலிசி இல்லாமல் நீங்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். |
மூன்றாம் தரப்பினர் பொறுப்புகளுக்கான காப்பீடு | காப்பீடு செய்யப்பட்ட பைக் காரணமாக மூன்றாம் தரப்பினர் காயமடைந்தால் அல்லது துரதிர்ஷ்டவசமான இறப்பை சந்தித்தால், இந்த பாலிசியின் கீழ் நிதி இழப்பீடு காப்பீடு செய்யப்படும். |
மலிவான பாலிசி | மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு விரிவான மற்றும் ஸ்டாண்ட்அலோன் ஓன்-டேமேஜ் பாலிசியை விட மிகவும் மலிவானது. கியூபிக் கெப்பாசிட்டியின் அடிப்படையில் IRDAI அதன் பிரீமியத்தை தீர்மானிக்கிறது. |
மூன்றாம் தரப்பினர் வாகனத்திற்கான காப்பீடு | காப்பீடு செய்யப்பட்ட பைக் மூன்றாம் தரப்பினருக்கு சேதத்தை ஏற்படுத்தினால் மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு பாலிசி கவரேஜை வழங்குகிறது. |
காகிதமில்லா செயல்முறை | நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு கோரலை எழுப்பினாலும் அல்லது பிளானை புதுப்பித்தாலும், எந்தவொரு ஆவணமும் தேவையில்லை. நீங்கள் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். |
எங்கள் மூன்றாம் தரப்பு பைக் காப்பீட்டு பாலிசியுடன் எந்தவொரு மருத்துவ அவசரநிலைகளுக்கும் எதிராக உங்களை பாதுகாக்க ₹ 15 லட்சம் மதிப்புள்ள கட்டாய தனிநபர் விபத்து (சிபிஏ) பாலிசியை நாங்கள் வழங்குகிறோம்.
மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டில், காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாகனம் சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் சொத்து சேதத்திற்கான செலவுகளை காப்பீட்டு வழங்குநர் செலுத்துவார்.
காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாகனம் காரணமாக மூன்றாம் தரப்பு நபர் காயம் அல்லது மரணத்தை எதிர்கொண்டால், மருத்துவ சிகிச்சை அல்லது பிற இழப்புகளுக்கு காப்பீட்டு வழங்குநர் காப்பீட்டை வழங்குவார்.
இரு சக்கர வாகன மூன்றாம் தரப்பினர் காப்பீட்டை வாங்குவது சட்டத்தின்படி ஒவ்வொரு பைக்/ஸ்கூட்டர் உரிமையாளருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகும். 3ஆம் தரப்பினர் பைக் காப்பீட்டின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை படித்த பிறகு நீங்கள் ஒரு விரிவான பைக் காப்பீட்டு பாலிசியை தேர்வு செய்யலாம். கீழே உள்ள அட்டவணையில் நாம் அதைப் பார்ப்போம்
நன்மைகள் | தீமைகள் |
பைக்கிற்கான மூன்றாம் தரப்பினர் காப்பீடு மூன்றாம் தரப்பினரின் காயம் அல்லது இறப்பு உட்பட மூன்றாம் தரப்பினரின் சேதங்களுக்கு காப்பீட்டாளருக்கு காப்பீட்டை வழங்குகிறது. எ.கா. திரு.A தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது தற்செயலாக திரு.B-க்கு காயம் ஏற்படுகிறது, காப்பீட்டாளர் திரு.B-யின் சிகிச்சை செலவை செலுத்துவார். | மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசி காப்பீடு செய்யப்பட்ட நபர் அல்லது அவர்களின் வாகனத்திற்கு ஏற்படும் எந்தவொரு சேதங்கள் அல்லது இழப்பையும் உள்ளடக்காது. எ.கா. திரு. A என்ற நபர் இந்த பாலிசியை கொண்டுள்ளார் மற்றும் அவரது ஸ்கூட்டர் சேதமடைந்த ஒரு விபத்தை சந்திக்கிறார், அந்த விஷயத்தில், பழுதுபார்ப்பு செலவு திரு. A என்பவரால் ஏற்கப்படும்.. |
மூன்றாம் தரப்பினர் பொறுப்புகளுக்கான காப்பீடு | இந்த பாலிசியுடன், பாலிசிதாரரின் பைக்கை திருட்டிற்கு காப்பீட்டாளர் இழப்பீடு வழங்கமாட்டார். |
விரிவான பைக் காப்பீட்டு பாலிசியுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டிற்கான பிரீமியம் மலிவானது. | இரு சக்கர வாகன மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு செலவு குறைவானது, இருப்பினும், நீங்கள் வரையறுக்கப்பட்ட காப்பீட்டை பெறுவீர்கள். |
இந்த பாலிசி வாங்க எளிதானது மற்றும் பிரீமியம் விலை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (IRDAI) தீர்மானிக்கப்படுகிறது. | மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டில் ரைடர்கள் எதுவுமில்லை. மேலும், நீங்கள் காப்பீடு செய்யப்பட்ட அறிவிக்கப்பட்ட மதிப்பை (ஐடிவி) தனிப்பயனாக்க முடியாது. |
மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீடு பாலிசிதாரருக்கு மிகவும் அடிப்படை வகை காப்பீட்டை வழங்குகிறது. இது வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படும் சேதம்/இழப்புகளிலிருந்து உங்களுக்கு காப்பீடு அளிக்கிறது. மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு அனைத்து இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கும் கட்டாயமாகும், இதில் தவறினால் ₹. 2000 அபராதம் மற்றும்/3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை.
அளவுருக்கள் | விரிவான இருசக்கர வாகனக் காப்பீடு | மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகனக் காப்பீடு |
காப்பீடு | ஒரு விரிவான இரு சக்கர வாகன காப்பீட்டு பாலிசி சொந்த சேதம் மற்றும் மூன்றாம் தரப்பினர் பொறுப்புகளுக்கு காப்பீடு வழங்குகிறது. | மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசி மூன்றாம் தரப்பினர் பொறுப்புகளுக்கு மட்டுமே காப்பீட்டை வழங்குகிறது. காப்பீடு செய்யப்பட்டவரின் வாகனத்தால் மூன்றாம் தரப்பினருக்கு காயம், இறப்பு மற்றும் சொத்து சேதம் ஆகியவை இதில் உள்ளடங்கும். |
தேவையின் தன்மை | இது கட்டாயமில்லை, இருப்பினும் உங்களுக்கும் உங்கள் வாகனத்திற்கும் ஒட்டுமொத்த பாதுகாப்பைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது. | மோட்டார் வாகன சட்டத்தின்படி குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பினர் காப்பீட்டை கொண்டிருப்பது கட்டாயமாகும் |
ஆட்-ஆன்கள் கிடைக்கும்தன்மை | எச்டிஎஃப்சி எர்கோ விரிவான பைக் காப்பீடு மூலம் நீங்கள் பூஜ்ஜிய தேய்மான பாதுகாப்பு மற்றும் அவசர உதவி காப்பீட்டைப் பெறலாம். | மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீட்டுடன் ஆட்-ஆன் காப்பீடுகளை தேர்வு செய்ய முடியாது. |
விலை | இது ஒப்பீட்டளவில் விலையுயர்ந்தது ஏனெனில் இது விரிவான காப்பீட்டை வழங்குகிறது. | மூன்றாம் தரப்பு பொறுப்புகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்குவதால் இதன் விலை குறைவானது. |
பைக் மதிப்பின் தனிப்பயனாக்கல் | உங்கள் காப்பீட்டு தேவைகளுக்கு ஏற்ப விரிவான இரு சக்கர வாகன காப்பீட்டு பாலிசியை நீங்கள் தனிப்பயனாக்கலாம். | மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசியை தனிப்பயனாக்க முடியாது. இது ஒரு தரப்படுத்தப்பட்ட பாலிசியாகும், இதன் விலை IRDAI மூலம் அறிவிக்கப்பட்ட வருடாந்திர பைக் காப்பீட்டு விகிதங்கள் மற்றும் உங்கள் பைக்கின் என்ஜின் கியூபிக் திறன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. |
சிறப்பம்சங்கள் | மூன்றாம் தரப்பினர் | சொந்த சேதம் |
காப்பீடு | Covers damages and injuries caused to third parties accidently involving insured person’s vehicle. | Covers your vehicle against fire, theft, natural calamities, etc. |
பிரீமியம் | The Premium is lower. | The premium is fixed and lower. The premium is determined by IRDAI. |
ஆட் ஆன்ஸ் | You cannot customise the plan by adding riders to your policy. | You can customise by adding add-ons like zero depreciation, engine protect cover, etc. |
தேய்மானம் | The insurance premium is not affected by depreciation rate. | The insurance premium is affected by depreciation rate. |
மூன்றாம் தரப்பு பைக் காப்பீட்டின் கீழ் இழப்பீடு உரிமையாளர்-டிரைவருக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், உரிமையாளர்-ஓட்டுநர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடு செய்யப்பட்ட பைக்கின் பதிவுச் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும். பாலிசிதாரருக்கு மூன்றாம் தரப்பு பைக் காப்பீட்டின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டு சதவீதத்தை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்:
காயத்தின் தன்மை | இழப்பீட்டின் அளவு |
இறப்பு ஏற்பட்டால் | 100% |
இரண்டு கைகால்கள் அல்லது இரண்டு கண்களின் பார்வை இழப்பு ஏற்பட்டால் | 100% |
ஒரு கைகால் மற்றும் ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டால் | 50% |
காயங்களால் நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் | 100% |
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும் புதிய பைக்குகளுக்கு நீண்டகால மூன்றாம் நபர் பைக் காப்பீடு பாலிசியை வழங்க வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டு பாலிசி கட்டாயம் வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு IRDAI உத்தரவிட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு புதிய பைக் உரிமையாளரும் தங்கள் வாகனத்தில் ஐந்தாண்டு மூன்றாம் நபர் பைக் காப்பீட்டு பாலிசி வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த புதிய பாலிசி அறிமுகத்தால், ஒவ்வொரு ஆண்டும் பாலிசியை புதுப்பிப்பதில் சிரமம் இருக்காது. இந்த பாலிசியின் மூலம், பாலிசிதாரர் ஐந்து ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டுள்ளதால் பிரீமியத்தில் வருடாந்திர உயர்வையும் தவிர்க்கலாம்.
1 ஜூன், 2022 முதல் நீண்ட கால மூன்றாம் தரப்பு பைக் காப்பீட்டு பாலிசிக்கு கீழே உள்ள விகிதங்கள் பொருந்தும்
எஞ்சின் கொள்ளளவு (cc) | 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் தரப்பு பைக் காப்பீட்டு விகிதங்கள் |
75cc வரை | ₹ 2901 |
75 முதல் 150 cc -க்கு இடையில் | ₹ 3851 |
150 முதல் 350 cc -க்கு இடையில் | ₹ 7365 |
350 சிசி க்கும் அதிகமான | ₹ 15117 |
இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் திறன் அடிப்படையில் மூன்றாம் தரப்பு பைக் காப்பீட்டு பிரீமியத்தை IRDAI தீர்மானிக்கிறது. எனவே, இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் கியூபிக் கெப்பாசிட்டி (cc) என்பது மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பிரீமியத்தை பாதிக்கும் ஒரே காரணியாகும்.
மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டை ஆன்லைனில் வாங்கும்போது, அதன் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். உங்கள் பைக் காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிடுவதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
• படிநிலை 1 – எச்டிஎஃப்சி எர்கோ இணையதளத்தை அணுகவும் மற்றும் உங்கள் பைக் பதிவு எண்ணை உள்ளிட்டு விலைக்கூறலை பெறுவதன் மூலம் தொடரவும்.
• படிநிலை 2- நீங்கள் உங்கள் பைக் தயாரிப்பு மற்றும் மாடலை உள்ளிட வேண்டும்.
• படிநிலை 3 – நீங்கள் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
• படிநிலை 4 – உங்கள் பழைய பைக் காப்பீட்டு பாலிசி பற்றிய விவரங்களை வழங்கவும்- காலாவதி தேதி. உங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் ID-ஐ உள்ளிடவும்.
• படிநிலை 5 - நீங்கள் இப்போது உங்கள் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு விலையை காணலாம்.
மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசி பாலிசிதாரரின் வாகனத்தால் விபத்து ஏற்பட்டால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதம் அல்லது காயத்தை உள்ளடக்குகிறது. காப்பீடு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி உள்ளது. மூன்றாம் தரப்பினர் காப்பீடு உங்களுக்கு அல்லது உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் எந்தவொரு காயம் அல்லது சேதத்தையும் உள்ளடக்காது.
மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு உள்ளடங்கும்:
• மூன்றாம் தரப்பினரின் நிரந்தர இயலாமை அல்லது இறப்பு.
• மூன்றாம் தரப்பினரின் சொத்து சேதம்.
• காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்/ஓட்டுநரின் தற்செயலான மரணம் (மூன்றாம் தரப்பு காப்பீட்டுக் பாலிசியில் தனிப்பட்ட விபத்து கூறு கிடைத்தால் மட்டுமே).
மூன்றாம் தரப்பினர் காப்பீட்டின் கீழ் இழப்பீட்டுத் தொகை சூழ்நிலைகளைப் பொறுத்து வேறுபடலாம். மேலும், நீங்கள் ஒரு செல்லுபடியான ஓட்டுநர் உரிமம், செல்லுபடியான பைக் காப்பீடு மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் மட்டுமே காப்பீட்டாளரால் இழப்பீடு வழங்கப்படும். காப்பீட்டாளருக்கு உங்கள் கோரலை நிராகரிக்க உரிமை உள்ளது.
பைக்குகளின் கியூபிக் கெப்பாசிட்டி (CC) என்ஜினின் அதிகபட்ச பவர் அவுட்புட் ஆகும். மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியத்தை தீர்மானிக்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கான (IRDAI) பைக்கின் கியூபிக் கெப்பாசிட்டி முதன்மை காரணியாகும். பைக்கின் என்ஜின் திறன் அடிப்படையில் காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை விகிதங்களை தீர்மானித்துள்ளது.
அதிக CC என்ஜின் கொண்ட பைக்கிற்கு காப்பீட்டாளர்கள் அதிக பிரீமியத்தை வசூலிக்கின்றனர். அதிக CC கொண்ட பைக் அதிக ஆபத்து என்று கருதப்படுகிறது, ஏனெனில் இது அதிக வேகம் செல்லலாம் மற்றும் பெரும்பாலும் அதிக சாகச ரைடிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. இது விபத்துகள் அல்லது சேதத்தின் சாத்தியக்கூறை அதிகரிக்கிறது, எனவே அதிக CC கொண்ட பைக்குகளுக்கான மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியம் அதிகமாக உள்ளது. மேலும், அதிக CC என்ஜின்களைக் கொண்ட பைக்குகள் பொதுவாக அதிக விலையுயர்ந்த பாகங்களைக் கொண்டுள்ளன மற்றும் விபத்து ஏற்பட்டால் பழுதுபார்க்க விலையுயர்ந்தவை.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி மூன்றாம் தரப்பு இரு சக்கர வாகனக் காப்பீட்டை வைத்திருப்பது கட்டாயம் என்பதைத் தவிர, இந்தக் காப்பீட்டை நீங்கள் பெறுவதற்கு வேறு காரணங்கள் உள்ளன:
✔ சட்டப்படி கட்டாயம்: மூன்றாம் தரப்பு இரு சக்கர வாகன காப்பீடு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து பைக் உரிமையாளர்களும் கட்டாயமான காப்பீடாகும். டிராஃபிக் போலீஸ் மூலம் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு இல்லாமல் நீங்கள் கண்டறியப்பட்டால், உங்களுக்கு ₹ 2000/ வரை அபராதம் விதிக்கப்படலாம்.
✔ 3வது தரப்பினர் வாகனத்திற்கு ஏதேனும் சேதத்தை உள்ளடக்குகிறது: மூன்றாம் தரப்பினர் வாகனம் அல்லது அவர்களின் சொத்துக்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட பைக்கினால் விபத்து ஏற்பட்டால், உங்கள் மூன்றாம் தரப்பு பைக் காப்பீடானது, சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்.
✔ 3ஆம் தரப்பினர் வாகன உரிமையாளர்-ஓட்டுநரின் காயம் அல்லது இறப்புக்கான காப்பீடு: காப்பீடு செய்யப்பட்ட பைக்கின் விபத்தின் போது மூன்றாம் தரப்பினர் வாகனத்தின் உரிமையாளர் காயமடைந்தால், அத்தகைய தனிப்பட்ட சேதத்திற்கான நிதி இழப்புகளை மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஏற்கும். மேலும், விபத்து காரணமாக மூன்றாம் தரப்பினர் இறந்தால், மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீடு காப்பீடு செய்யப்பட்டவரை சட்ட மற்றும் நிதி தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும்.
✔ விரைவான மற்றும் எளிய வாங்குதல்: கடினமான காப்பீட்டு வாங்குதல் நடைமுறைகள் பழமையானவை. இப்போது நீங்கள் விரும்பும் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டை குறைந்தபட்ச ஆவணங்களுடன் சில கிளிக்குகளில் எங்கள் இணையதளத்தை அணுகுவதன் மூலம் பெறுங்கள்
✔ செலவு-குறைந்த காப்பீட்டு பாலிசி: அனைத்து மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியங்களும் IRDAI மூலம் முன்வரையறுக்கப்பட்டுள்ளதால்; இது இந்த பாலிசியை அனைவருக்கும் மலிவானதாக்குகிறது. எனவே, ஒரு பெயரளவு மதிப்பிற்குள், சாலையின் பக்கத்தில் உங்களுக்காக காத்திருக்கும் எந்தவொரு எதிர்பாராத மூன்றாம் தரப்பினர் செலவுகளுக்கும் நீங்கள் காப்பீட்டை எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்கவும்: மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீட்டின் நன்மைகள்
எச்டிஎஃப்சி எர்கோ இரு சக்கர வாகன காப்பீட்டை தனித்துவமாக்கும் முக்கிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
• விரைவான, ஆவணமில்லா காப்பீடு வாங்கும் செயல்முறை
• பிரீமியம் தொடக்க விலை ₹538*
• அவசரகாலத்தில் வீட்டிற்கே வரும் சேவை அல்லது சாலையோர உதவி ஆட்-ஆன் கவர் விருப்பம்
• ஒரு விரிவான நெட்வொர்க் 2000+ ரொக்கமில்லா கேரேஜ்கள்
• வரம்பற்ற கோரல்களை எழுப்பலாம்
• 99.8% கோரல் செட்டில்மென்ட் விகிதம்^
• ஆய்வு இல்லாமல் புதுப்பித்தலுக்கான விருப்பம்
மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டை ஆன்லைனில் வாங்குவதன் மூலம் கீழே உள்ள படிநிலைகள் உங்களுக்கு வழிகாட்டும்.
பாதுகாப்பான பணம்செலுத்தல் கேட்வே வழியாக பிரீமியத்தை செலுத்துங்கள். இரு சக்கர வாகன காப்பீட்டு பாலிசி உங்கள் பதிவுசெய்த இமெயில் முகவரிக்கு அல்லது வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்படும்.
நீங்கள் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசியை புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் பின்வரும் படிநிலைகளை பின்பற்ற வேண்டும்:
படிநிலை 1: காப்பீட்டு வழங்குநர் இணையதளத்தை அணுகவும், வாகன பதிவு எண்ணை உள்ளிட்டு பாலிசியை புதுப்பிக்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 2: நீங்கள் புதுப்பிக்க விரும்பும் உங்கள் பாலிசியுடன் தொடர்புடைய விவரங்களை உள்ளிடவும். மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யவும்.
படிநிலை 3: புதுப்பிக்கப்பட்ட பைக் காப்பீட்டு பாலிசி உங்கள் பதிவுசெய்த இமெயில்-ID-க்கு அனுப்பப்படும்.
இந்தியச் சாலைகளில் பைக்கை ஓட்டுவது விபத்துகளின் அதிக சாத்தியக்கூறு விகிதத்தின் காரணமாக நிறைய அபாயங்களை உள்ளடக்குகிறது. சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அனைத்து இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கும் காப்பீடு முக்கியமானது மற்றும் ஒரு சிறந்த திட்டம் எந்தவொரு வாகன சேதங்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். உங்களிடம் அடிப்படை மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசி இருந்தால், மூன்றாம் தரப்பினர் பொறுப்புகளுக்கு மட்டுமே நீங்கள் காப்பீடு பெறுவீர்கள், அதே நேரத்தில் விரிவான காப்பீடு சொந்த சேதம் மற்றும் மூன்றாம் தரப்பினர் பொறுப்புகளுக்கு காப்பீடு வழங்குகிறது. உங்கள் பைக்கிற்கான அடிப்படை மூன்றாம் தரப்பு காப்பீட்டை மட்டுமே நீங்கள் வைத்திருந்தால், விரிவான காப்பீட்டிற்கு மாற்றுவதற்கான படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
• காப்பீட்டு வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
• இரு-சக்கர வாகனக் காப்பீட்டை வாங்குவதன் மீது கிளிக் செய்யவும்.
• உங்கள் தற்போதைய மூன்றாம் தரப்பு காப்பீட்டு பாலிசி தொடர்பான விவரங்களைக் கொண்ட அனைத்து தேவையான படிவங்களையும் சமர்ப்பிக்கவும்
• உங்கள் இரு சக்கர வாகனத்திற்கான சுய ஆய்வு விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
• சர்வேயர் வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில், பாலிசி திட்டம் மேம்படுத்தப்படும்
• முந்தைய மூன்றாம் தரப்பு காப்பீட்டுத் திட்டம் இரத்து செய்யப்படும், மற்றும் புதிய பாலிசி தொடங்கப்படும்
✔ செல்லுபடியான ஆதாரம் மூன்றாம் தரப்பினருக்கு காப்பீடு செய்யப்பட்ட பைக் அல்லது அவர்களின் சொத்துக்கு ஏற்படும் சேதத்திற்கான கோரலை மேற்கொள்வதற்கு முன்னர் பொருத்தமான, துல்லியமான மற்றும் நம்பகமான சான்றுகள் இருக்க வேண்டும்.
✔ காப்பீட்டு நிறுவனம் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தல்: உங்கள் பைக் விபத்துக்குள்ளானால் உடனடியாக உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கும் காவல்துறைக்கும் தெரிவிக்கவும், மூன்றாம் தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கலாம்.
✔ சேதங்களுக்கான வரம்பு மோட்டார் விபத்து கோரல்கள் நீதிமன்றம் சேதங்களில் வழங்கக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிட்டு ஒரு ஆர்டரை வழங்கும். இழப்பீட்டுத் தொகை IRDAI வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப உள்ளது. தற்போது, மூன்றாம் தரப்பினரின் சொத்துக்கு ஏற்படும் சேதங்களுக்கான அதிகபட்ச செலுத்த வேண்டிய தொகை ₹7.5 லட்சமாகும். இருப்பினும், மூன்றாம் தரப்பினருக்கு காயம் ஏற்பட்டால், இழப்பீட்டு தொகைக்கு எந்த வரம்பும் இல்லை.
• மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டு பாலிசியின் நகல்
• சரிபார்ப்புக்காக பைக்கின் RC, மற்றும் அசல் வரி ரசீதுகளின் நகல்.
• மூன்றாம் தரப்பினர் இறப்பு, சேதம் மற்றும் உடல் காயங்களை தெரிவிக்கும்போது போலீஸ் FIR அறிக்கை.
• உங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தின் நகல்.
• சேத பழுதுபார்ப்பு மதிப்பீடு.
• பணம்செலுத்தல் இரசீதுகள் மற்றும் பழுதுபார்ப்பு பில்கள்.
பின்வரும் வழிகளில் எச்டிஎஃப்சி எர்கோ உடன் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீட்டை நீங்கள் கோரலாம்
படிநிலை 1- உங்கள் இரு சக்கர வாகனத்தால் மூன்றாம் தரப்பினர்/சொத்துக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், மூன்றாம் தரப்பினர் உங்கள் மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீட்டு பாலிசிக்கு எதிராக ஒரு கோரலை தாக்கல் செய்து உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர்-ஐ பதிவு செய்ய வேண்டும்.
படிநிலை 2- சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உங்கள் 3வது தரப்பினர் பைக் காப்பீட்டு விவரங்களை வழங்கவும்.
படிநிலை 3- சம்பவம் குறித்து உடனடியாக எச்டிஎஃப்சி எர்கோவிற்கு தெரிவிக்கவும்.
படிநிலை 4 - சம்பந்தப்பட்ட தரப்பினர் எச்டிஎஃப்சி எர்கோவிற்கு தெரிவித்தவுடன், மோட்டார் விபத்து கோரல் தீர்ப்பாயத்திற்கு வழக்கை டிரான்ஸ்ஃபர் செய்வோம்.
படிநிலை 5- நீதிமன்றம் உங்களுக்கு சட்ட அறிவிப்பை அனுப்பினால், உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கவும். எச்டிஎஃப்சி எர்கோ குழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி சட்ட விளைவுகளை கையாளும்.
படிநிலை 6 - தீர்ப்பாயம் இழப்பீட்டுத் தொகையை தீர்மானித்தவுடன், எச்டிஎஃப்சி எர்கோ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டுத் தொகையை செலுத்தும்.
பைக் எஞ்சின் கொள்ளளவு | பிரீமியம் |
75cc-க்கும் குறைவாக | ₹ 482 |
75cc-க்கும் அதிகமானது ஆனால் 150cc-க்கும் குறைவானது | ₹ 752 |
150cc-க்கும் அதிகமானது ஆனால் 350cc-க்கும் குறைவானது | ₹ 1,193 |
350CC-க்கும் அதிகமாக | ₹ 2,323 |